Monday 9 July 2012

திருநீற்றணி : லக்கானிய விளக்கம்

சமூக சமய அடையாளங்களுக்கு ஏற்ற உளப்பகுப்பாய்வு லக்கானியம். மார்சியம் விட ஆழமானது என்பது என் கருத்து. சமுகத்துக்கு மொழி அடிப்படை.  மொழி இன்றி சமுக உறவுகள் நிகழ வாய்ப்பில்லை. ஒருவர் மற்றவருள் தங்கி இயங்க மொழி தேவைப் படுகின்றது. இதோடு மொழி பணி முடிந்து விடவில்லை. சமுக உறவுகளுக்கு வேண்டிய அனைத்துக் குறிகளையும் தயாரிக்கிறது. சமயக் குறிகளும் அவற்றுள் ஒன்று.



ஒவ்வொரு சமயத்திற்கெனத் தனித்த அடையாளங்கள் உண்டு. அவற்றில் உடல் சார் அடையாளங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. தன் பெயரைப் போல் சமயச்சார்பையும் பிறருக்குத் தெரிவிக்க மனிதன் கடமைப்பட்டிருக்கின்றான். அவனை ஒத்த மற்றவருடன் தொடர்புகொள்ள வகை செய்கிறது.  மொழி கொண்டு மற்றவருடன் நாம் நெருக்கம் கொள்வோம். ஆனால் மொழி மட்டும் இதற்குப் போதாது. இதைக் கொண்டு ஒருவர் சாதி சமயம் அறிய முடியாது. எனவே பிற உத்திகளை நாம் பின்பற்றவேண்டி இருக்கின்றது. அதன் விளைவே சமூக, சமயக் குறிகள் ஆகும்.

சமயக் குறிகள் யாவும்  மொழி வழி வந்ததால் மொழித் தன்மை இவற்றின் இயல்பு ஆகிவிடுகின்றன. லக்கான் கூறும் குறிப்பான்  குறியீடு இடையிலான குறி உறவு, இடையக நிலை (intersubjectivity ), அங்கீகாரம் எல்லாம் சமயக் குறிகளுக்கும் உண்டு. அணி இலக்கணமும் ஐரணி (irony ) கூட உண்டு.. இதை விவரிக்க வருகிறது இந்த ஆய்வு.. இதன்படி திருநீறு ஓர் அணியாகிறது.. லக்கானிய உள இயங்கியலில் உருவகம் போன்ற பதிலியன் (metaphor ) முறையில் புறத்தெரிவாகிறது என்று நிறுவுகிறேன்.. பதிலியன்(metaphor ) ஆகன் (metanymy ) இரண்டும் லக்கானிய அணிகளாகும்.

சாதாரண மொழிநடை விட அணியிலக்கண நடை அழகானது ஆழமானதும் கூட. சமயக் குறியான திருநீறு இத்தன்மைத்தே. உடலில் அழகுக் குறிகளாகவும் சைவர்கள் அணிந்து மகிழ்வர். உலகச் சமயங்களில் அழகியல் சார் குறிகளே பரவலாக உள்ளன. இக்குறிகள்  அணிகலன்களாகவும் உடலை அலங்கரிக்கின்றன. இதன் பின்னணியில் உள்ள நனவிலிக் கூறு எது என்பதை லக்கான் வழியில் விவரிக்க வருகிறது இவ்வாய்வு.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத தத்துவத் துறை 1996 இல் நடத்திய உலக சைவ மாநாட்டில் வழங்கியக் கட்டுரை இது

No comments:

Post a Comment