Monday 16 July 2012

நாட்டுப்புறச் சமயம் : புதிய உளப்பகுப்பாய்வு நோக்கி..

சமயத் தோற்றம் குறித்து மானிடவியல் ஆய்வுகள் பல நிகழ்ந்துள்ளன.  மனிதன் படிமலர்ந்த வழியில் சமூகக்கூறுகளும் சமயமும் படிமலர்ந்தன. கற்காலம் தொடங்கி இன்றைய நவீனம் வரை ஒரு கண்ணோட்டம் விட்டால் எளிதில் விளங்கிக் கொள்ளலாம். பழங்குடிச் சமயம், நாட்டுப்புறச் சமயம், செவ்வியல் சமயம் ஆகிய மூன்று கட்டங்களுள் அனைத்தையும் காலகிரமப் படி அமைத்துவிடலாம். இவற்றைப்பற்றிப் போதுமான ஆய்வுகள் மானிடவியலில் நடந்துள்ளன. உளவியலும் தமது பங்கை வழங்கியுள்ளது. சமயத்தின் தோற்றம் குடித்த ஆய்வை  ஃப்ராய்ட் தொடக்கி வைத்தார். அதன் மூலம் நனவிலியில் இருப்பதாக அறிவித்தார். அதனால் சமயத்தை நோய்க்குறி என்றார்.



இங்கிருந்து எனது ஆய்வு தொடங்குகிறது. ஃப்ராய்டிய  உளப் பின்னணியில் சமயத்தைப் பார்க்கும் போது சூபர் ஈகோ(superego ) அங்கம் என்பதில் ஐயமில்லை. அதாவது சமூகக் கருத்தியல் சார்ந்தது. சமயத்தைச் சார்ந்திருத்தல் என்பது புறத்தைச் சார்ந்திருத்தல் என்றாகிறது. எனவே சமயப் பற்றைப் புறநிலை மோகம் (object eroticism ) என்பார் ஃப்ராய்ட். குறிப்பாக இடிபஸ் சிக்கல் (oedipus complex ) என்பார். இதை நான் சற்று மாற்றி நார்சிசம் (narcissism) நிலைக்கும் பொருத்துகிறேன். காரணம் புறமதம் பாதிக்கப் பட்டால் அகநிலை(subject ) பாதிக்கிறது. இது ஒன்றுதல் (identification) வழியில் ஏற்படும் உள நிகழ்வு ஆகும். இது  நார்சிச ஒன்றுதல்   இன்பதாலும் புறசார்பு இருப்பதாலும் சமயப் பற்று என்பது புறச்சார்த் தன்மோகம் என்கிறேன். இதை நிரூபிக்க நாட்டுப் புறச்  சமயத்தை முன்வைக்கிறேன்.


No comments:

Post a Comment