சமூகவியல் ஆய்வுக்கு மட்டுமின்றி உளவியல் ஆய்வுக்கும் ஏற்புடையவர் ஜெயகாந்தன் என்பது அவரை முழுமையாக அறிந்தவர்கள் அங்கீகரிப்பர். தமது கதைகள் சமூகப் பிரச்சனைகளை மட்டும் கொண்டிருக்காது.. சராசரி மனிதனின் உளவியல் பிரிச்சனைகளையும் நுணுக்கமாக விவரிக்கும். இது நாவல்களுக்கு மட்டும் அல்ல சிறுகதைகளுக்கும் பொருந்தும்.. குறுநாவலுக்கும் பொருந்தும்.. அவற்றில் ரிஷிமூலம் ஒன்று..ஜெயகாந்தன் கதைகளில் பரபரப்பை ஏற்படுத்திய சிலவற்றில் ரிஷிமூலம் ஒன்று.. 1966 வாக்கில் வெளிவந்த இந்நாவல் எதிர்ப்புகளைச் சந்தித்தது.. காரணம் கதைக்கரு.. தாய் மீதான பாலியல் எண்ணங்களால் ஒருவன் அலைக் கழிக்கப்படுகின்றான் என்பதை விளக்கும் உளவியல் நாவல் . இது போதாதா எதிர்ப்புகள் தோன்ற..! இக்கருவை ஃப்ராய்டிடம் இருந்து ஜெயகாந்தன் பெற்றார் என்று அப்போதே சிலர் விமர்ச்சித்தனர். முன்னுரையிலேயே ஜெயகாந்தன் மறுக்கிறார். அவற்றை ஆதாரமாகக் கொண்டு ஃப்ராய்டியத்தின் எதிரொலியே ரிஷிமூலம் என்று ஓர் ஆய்வு செய்திருந்தேன். இதை அடிப்படியாகக் கொண்டு லக்கானியப் பார்வையில் ரிஷிமூலத்தில் இங்கே ஆய்வு செய்துள்ளேன்.
லக்கானியத்தில் ஃப்ராய்டியத்தைவிட இடிபஸ் சிக்கலுக்கு வலிமை மிகுதி. லக்கானின் சமூக மனிதன் இடிபஸ் சிக்கலால் கட்டமைக்கப் படுகின்றான். அவரின் குறியீட்டு முறைமை (symbolic order ) அடிப்படையில் இடிபஸ் சிக்கல் வேருடையது. அதனால் சமூகச் செயல்கள் ஒவ்வொன்றிலும் இடிபஸ் பாதிப்பு இன்றி நிகழாது என்பது லக்கானியம். இந்தக் கதையில் ராமராஜனின் நனவு வாழ்வு, கனவு வாழ்வு மற்றும் துறவு வாழ்வு ஆகிய மூன்றிலும் இடிபசால் அலைகழியப் படுகின்றான். இதற்கு பின்புலமாக மொழி உள்ளது.
மனித உலகம் என்பது மொழி உலகமே ஆகும். அந்த மொழியுள் நாம் ஒவ்வொருவரும் குரிப்பான்களே (signifier ) ஆவோம். அந்த வகையில் ராமராஜன் ஒரு குறிப்பான் ஆகின்றான். இந்தக் குறிப்பான் சமூகத் தளத்தில் அர்த்தம் பெற இப்படியெல்லாம் அலைகழிகிறது என்பதை விளக்குவதாக இவ்வாய்வு அமைந்துள்ளது.
No comments:
Post a Comment