காதல்- இயற்கை தந்த கோடை.. இதன் ஒரே நோக்கம் இனப்பெருக்கம்.. எனவே காதல் ஒரு இயல்பூக்கம் ஆகும்.. விலங்குக் காதலிடம் இருந்து மனிதக் காதல் வேறுபட்டது. இனப்பெருக்கத்தையும் தாண்டி வேறு காரணிகள் உண்டு.. விலங்குக் காதலில் உடல் ஆதாரம்.. மனிதக் காதலில் உடல் இரண்டாம் பட்சமாகும்.. சிலரிடம் உடல் காதல் உண்டு.. இது ஹார்மோன் காதல் ஆகும்.. நிலைக்காது.. ஹார்மோன் அடங்கிவிட்டால் உடல் காதல் மறைந்துப் போகும். இதை இனக் கவர்ச்சி என்பர். இனப் பெருக்கத்துக்கு இது போதும்.. சமூக வாழ்வுக்கு உள்ளமே ஆதாரம்.. மனிதக் காதலுக்கும் உள்ளமே ஆதாரம். இது எப்படி செயல்படுகிறது என்பதை ஃப்ராய்டிய உளவியல்படி பார்கிறேன்..குறிப்பிட்ட நபர் மீது காதல் வரக் காரணமென்ன? காதலிப்போருக்கே புதிரானது.. அழகான அவளை(னை ) விட்டு இவரைக் காதலிக்க நிர்பந்திப்பது எது? காதிளிப்போருக்கே இது தெரியாததால் காதல் ஒரு நனவிலி செயல்பாடு என நம்மால் உகிக்க முடியும்.. அந்த நனவிலிக் கூறுகளை ஆராய்கிறது இக்கட்டுரை. தன்மோகக் காதல் (narcissistic love ) ஒட்டுருக் காதல் (anaclitic love ) ஆகிய இரண்டு மானிடக் காதல் உள்ளன.. உங்கள் காதல் எவ்வகைப் பட்டது ? இவ்வாய்வில் காணலாம்..
யூங்கியத்தைப் புறக்கணித்துக் காதலை உளவியல் ரீதியில் அணுகமுடியாது. அவள் என் அனிமா. நான் அவளின் அனிமஸ். அனிமாவுக்கும்(anima ) அனிமசுக்கும் (animus ) இடையிலான மன உறவுதான் காதல். இது, தனியர் நனவிலியைக் கடந்து கூட்டு நனவிலிக்குள் நிகழும் உள நிகழ்வு ஆகும்.. உலகப் பொதுவானது.. உங்கள் காதலைப் புரிந்துகொள்ள உளப்பகுப்பாய்வு தேவை..
No comments:
Post a Comment