Wednesday 18 July 2012

தமிழரின் மனிதக் கடவுளர் கலாச்சாராம்

மனிதனைக் கடவுளாகப் பார்ப்பதில் எந்தச் சமயமும் சளைக்கவில்லை. கடவுளை மறுத்த புத்தரையும் கடவுலாக்கிப் பார்க்கும் மனோபாவம் இதற்குச் சான்று. ஏசு, முகமது நபி ஆகியோரைக் கடவுள் பண்புடன் இணைத்துப் பார்ப்பதும் இதற்குச் சான்று. இந்து சமயத்தில் மனிதக்கடவுள் கலாச்சாராம் மிகுதி.  இந்து மதத்தின் பல கடவுள் கொள்கை இதற்குக் காரணம். இந்தக் கொள்கை பலருக்கு கடவுளாகும்  இடம் அளிக்கின்றது. தமிழரின் மனிதக் கடவுள் கலாச்சாரம் இந்து பாங்குடையது. சித்தர்கள், அடியார்கள், சாமியார்கள், ரிஷிகள், துறவிகள், அருளாளர்கள்  எனப் பலரைக் கடவுள் நிலைக்கு வைத்தக் காலங்காலமாகத் தமிழர்கள் வணங்குகின்றனர். முன்னோர் வழிபாடும் இவ்வகைப்பட்டதே.



மனிதக் கடவுள் கலாசாரம் தமிழரிடம் வேரூன்றி இருப்பதற்குக் காரணம் என்ன? இதை ஆய்கிறது இந்த ஆய்வு. நாயகத்துவம் (heroism ) முதன்மைக் காரணம் என்கிறேன். காரணம் இந்துக் கடவுளர் யாவரும் புராணக் கதாநாயகர்கள் ஆவர். கதையில் அவர்கள் செய்யும் சாகசங்கள் கண்டு வணங்கும் மனோபாவம் சினிமா நடிகரின் திரை சாகசங்கள் கண்டு வணங்குகின்றனர்.  இவ்வழியில் அற்புதங்கள் செய்யும் சாமியார்களை வணங்குகின்றனர். ஹீரோயிசம் தான் மனிதக் கடவுள் கலாச்சாரத்திற்கு ஆதாரம். இது இந்து கடந்து உலக அளவிலான மனிதக் கடவுள் கலாச்சாரத்திற்கும் பொருந்து. இவ்வாறு இந்த ஆய்வு விவரிக்க வருகிறது.

பண்பாட்டு வேர்களைத் தேடி..  எனும் தொகுதியில் கட்டுரை இடம் பெற்றுள்ளது. ( வெளியீடு : நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம். பாளையங்கோட்டை ).

No comments:

Post a Comment