Thursday 19 July 2012

பழமொழியை ஆளுகையில் நனவிலி ஆளுமை

பழமொழி எனும் பெயெரே பழமையை உனர்த்தும். நனவிலி என்பது பழமைப் பகுதி. இரண்டுக்கும் இடையிலான இயைபு காண்பது இவ்வாய்வின் நோக்கம்.  பேச்சின்போது இயல்பாக வெளிப்படுவது பழமொழி. எந்தச் சூழலில் எது வெளிப்படும் என்று நாம் முடிவு செய்வதில்லை. பிறகு எது தீர்மானிக்கிறது? நனவனடங்கு மனம். இது நனவுக்கும் நனவிலிக்கும் இடையில் இருப்பது. பேச்சின் தொடர்ச்சியில்  சூழல் ஏற்ப நனவடங்கிலிருந்து வெளிப்பபவை பழமொழிகளாகும்.

ஆங்கிலத்தில் நனவோடை, நனவிலியோடை எனும் கருத்தாக்கங்கள் உண்டு. ஓர் எழுத்தாளன் சிந்தித்து எழுதும் போது தன்னறியா நிலையில் எழுதுவதுண்டு. எண்ணங்கள் தொடரியலாக வெளிப்பட எழுதுவதுண்டு. இது ஒருவித இலக்கிய உத்தி. அந்த எண்ணங்கள் நனவிலியில் இருந்து வந்தால் அது நனவிலியோடை ஆகும். நனவிலியோடை உத்தி கொண்டு பல எழுத்தாளர்கள் படைப்பை வழங்கி உள்ளனர். தமிழில் புதுமைப்பித்தன் சான்று. அவரின் கபாடபுரம் படித்துப் பாருங்கள். இத்தகு படைப்புகளில் நனவிலி கூறுகள் பரவலாகப் புறத்தெரிவாகும். பழமொழியும் இவ்வகைப்பட்டதே. பழமொழிகளில் நனவிலிக் கூறுகள் இவ்வாறு இடம்பெற்றுள்ளன என்பதை ஆய்கிறது இவ்வாய்வு. ஊசி காதில் ஒட்டகம் நுழையுமா ? இதில் பாலியல் குறியிடு உள்ளது. அது மட்டுமின்றி தகாப்புணர்ச்சி அடங்கியுள்ளது. இப்படிப் பழமொழிகளை நனவிலியோடை போல் பாவித்து உளப்பகுப்பாய்வுக்கு உட்படுத்தியுள்ளேன்.

No comments:

Post a Comment