Friday 20 July 2012

ஃப்ராய்டிய உள்ளத்தில் நாட்டுப்புறத் தெய்வங்களின் இயங்கியல் பங்கு

உளவியலில் ஃப்ராய்டிய உள்ளம் என ஒரு கருத்தியல் இருக்கிறது. யூங்கிய உள்ளம், லக்கானிய உள்ளம் எனப் பல உள்ளன. அவரவர் கண்ட உள அமைப்பு அவர் பெயர் கொண்ட உளக் கோட்பாடு ஆகிறது. ஃப்ராய்டிய உள்ளத்தில் மூன்றடுக்குகள் உள்ளன. யூங்கியத்தில் நான்கு அடுக்குகள் உள்ளன. லக்கான் அமைப்பு தனி. பல அமைப்புகள் உடையது. இங்கே ஃப்ராய்டிய உள்ளத்தில் நாட்டுப்புறத் தெய்வங்கள் இப்படி இயங்குகின்றன என்பதை ஆராய்கின்றேன்.

தெய்வங்கள் சமூகத்தில் மட்டும் இயங்குவன அல்ல. உள்ளத்திலும் முனைப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. கடவுள் பற்றி ஃப்ராய்ட் கூறும் கருத்திலிருந்து இவ்வாய்வு தொடங்குகிறது. கடவுள்களில் நாட்டுப்புறத் தெய்வங்கள் தனித்துவம் வாய்ந்தவை. மண்வாசனை உடையவை. ஒருகாலத்தில் மனிதராக இருந்தவை. மூர்க்கமானவை. வாழ்வியலில் பங்கு கொள்பவை. மிக நெருக்கமானவை. இனவே மனித உள்ளத்தில் செவ்வியல் தெய்வங்களைக் காட்டிலும் நாட்டுப்புறத் தெய்வங்கள் பெருமளவில் உள இயக்கங்களில் பங்குகொள்கின்றன. ஃப்ராய்டிய உள்ளத்தில் இவற்றின் பங்கு நனவிலி அச்சத்தோடு தொடர்புடையது என்பதை இவ்வாய்வில் நிறுவுகின்றேன். இதை நிருபிக்க சடங்குகளை ஆதாரமாகக் கொள்கின்றேன். மேலும் நனவிலி குற்ற உணர்வு பெரும்பங்கு வகிக்கின்றது. தன்னை வருத்திக் கொள்கின்ற (பூச்சட்டி, தீமிதித்தல், அலகு குத்தல்) சமயச் செயல்களாக வெளீப்பட்டுள்ளன என்பதை முன் வைக்கின்றேன்.
இந்தக் கட்டுரை சனங்களில் சாமிகள் எனும் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளது. (வெளியீடு : நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை)

No comments:

Post a Comment