Sunday 22 July 2012

இன அடையாளம் : லக்கானிய விளக்கம்

இன அடையாளம்- மனிதனுக்கு மட்டும் உரித்தான ஒன்று. அடையாளம் இன்றி எந்த உயிரினமும் இயங்க முடியாது. தாம் எப்படிப் பட்ட உயிர் என்று தெரிந்து கொண்டால்தான் இனப்  பெருக்கம் ஏற்பட வாய்ப்பாகும். ஒரு விதத்தில் இன அடையாளம் அனைத்து உயிரினங்களுக்கும் பொது என நினைக்கக் கூடும். ஆனால் இந்த இன அடையாளம் என்பது உயிரினத்தைக் குறிக்காது. சமூக வட்டத்தைக் குறிக்கும். இந்தச் சமூக வட்டம் உடல் சார்ந்ததாக இருக்கலாம். சான்று: நீக்ரோ, மங்கோலியர். தேசியம் சார்ந்ததாக இருக்கலாம். சான்று: அமெரிக்கா,  இந்தியா. சமயம் சார்ந்ததாகவும் இருக்கலாம். சான்று: இந்து, இஸ்லாம். ஏன்... சாதி சார்ந்ததாகவும் இருக்கலாம். சான்று: பிராமணர், தலித். ஏதாவது ஒரு குழுமத்தில் ஒவ்வொரு மனிதனும் இயைந்துள்ளான். ஒன்றுக்கு மேற்பட்டக் குழுவில் இருக்கவும் ஒருவரால் முடியும். இது சமுக மனித இயல்பு.



இந்தக் குழுவில் இருக்கின்றானோ அதற்கேற்ற அடையாளத்தைப் பேணவேண்டும் என்பது சமூக விதி. இந்த அடையாளம் குழும முகவரி ஆகும். அக்குழுமத்தில் அவன் உயிர்ப்புடன் இருக்கின்றான் இன்பதற்கான சாட்சியம். சமுக தளத்தில் இயங்கும் இன அடையாளங்கள் உள்ளத்தின் பிரதிபலிப்பு என்பது எனது வாதம். எனில், என அடையாளங்கள் உள இயக்கங்களில் எவ்வாறு பங்கு கொள்கின்றன என்பதை லக்கான் வழியில் ஆராய்கிறேன்.  ஃப்ராய்டை  விடுத்து லக்கானுக்கு வரக்  காரணம் உள்ளது. சமூகச் செயல்பாடுகளில்  உளவியல் செயல்பாடுகளைக் காணும் உத்தியை வழங்கியவர் லக்கான். எனவே இன அடையாளத்தின் நனவிலியைப் புரிந்துகொள்ள லக்கான் எளிதாக்குகிறார்.

இன அடையாளங்கள் நார்சிஸ்ஸ மோக நிலையைக் குறிக்கும் என்று ஃப்ராய்ட்  வழியில் புரிந்துகொள்ள முடிகிறது. லக்கான் கூறும் குறியீட்டு முறைமையில் (symbolic order ) நார்சிச்சத்திற்கும் அப்பால் உவரின் (Lack of  the Other ) குறையாகத் தெரிகிறது. இந்தக் குறைக்கு மொழி அமைப்பே ஆதாரம். எனவே குறியியல் பின்னணியில் இன அடையாளங்கள் நனவிலி மொழிகளாகின்றன என்பதை இவ்வாய்வில் முன் வைக்கிறேன்.

இந்தக் கட்டுரை   ஃப்ராய்ட் யூங் லக்கான் : அறிமுகமும் நெறிமுகமும்   நூலில் இடம்பெற்றுள்ளது. பக். 198 - 222


No comments:

Post a Comment