ஆய்வுப் பயணத்தில் அடியெடுத்து வைக்கும் பொது எழுதிய கட்டுரை இது. புதுவைப் பல்கலைக் கழகம் தமிழ்த் துறைக் கருத்தரங்கில் எம்..ஃபில் படிக்கும் போது வாசித்தது.. இப்படியொரு தலைப்பில் தொடக்கத்திலேயே எப்படி எழுதினேன் என்று எனக்கே வியப்பு.. காரணம் பழமை ஒரு பக்கம்.. புதுமை ஒரு பக்கம்.. இணைக்கும் பணியில் நான். அதிலும் தொல்காப்பியம் ஃப்ராய்டியம் இரண்டுக்கும் இடையில் பொதுக் கூறுகள் இருப்பதைச் சுட்டும் பணி. இது கோட்பாட்டு அளவிலான ஒப்பீடு..உள்ளுறை- சங்க இலக்கிய உத்தி. உரிப்போருளைக் கருப்பொருட்களுக்குள் மறைத்து வைப்பதாகும்.. வாசகனே அதைக் கண்டுபிடிக்க வேண்டும்.. எனவே உள்ளுறை பொருள் என்பது மறைபொருள் ஆகும்.. இது, ஃப்ராய்டியம்
கூறும் நனவிலி உத்தியான குறியீட்டாக்கம் (symbolisation ) எனும் கனவுத் தொழிலுக்கு இணையானது என்று நிறுவியுள்ளேன். உள்ளுறைக் கருப்பொருள்கள் யாவும் ஃப்ராய்டியம் சுட்டும் பாலியல் குறியீடுகள் ஆகின்றன.
இந்த ஆய்வின் வளர்ச்சி தொல்காப்பியத்தையும் ஃப்ராய்டியத்தையும் ஒப்பிடும் நிலைக்கு என்னை இட்டுச் சென்றது. தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் : சில இணைநிலைகள் ஆய்வை மேற்கொண்டேன். கோவையில் 2010 ஆம் ஆண்டு நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட 1000 ஆய்வுகளில் ஒன்று. இதில் ஃப்ராய்டின் கனவுக் கோட்பாடுகளும் தொல்காப்பியரின் உள்ளுறை இறைச்சிக் கோட்பாடுகளும் இணைநிலைகளாக இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளேன். இதன் வளர்ச்சி அழகியல் கோட்பாட்டையும் ஏற்க வைத்தது. கடந்த 2011 இல் தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் : அழகியல் இணைநிலைகள்
எனும் நூலாக்கம் செய்து வெளியிட்டேன். இது 22 ஆண்டு வளர்ச்சி. ஃப்ராய்டிய அழகியல் தொல்காப்பியத்தில் காணக் கிடைக்கின்றது என்பதே நூலின் சாரம்.. இந்த ஆய்வின் வளர்ச்சி தொல்காப்பியத்தையும் ஃப்ராய்டியத்தையும் ஒப்பிடும் நிலைக்கு என்னை இட்டுச் சென்றது. தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் : சில இணைநிலைகள் ஆய்வை மேற்கொண்டேன். கோவையில் 2010 ஆம் ஆண்டு நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தெரிவு செய்யப்பட்ட 1000 ஆய்வுகளில் ஒன்று. இதில் ஃப்ராய்டின் கனவுக் கோட்பாடுகளும் தொல்காப்பியரின் உள்ளுறை இறைச்சிக் கோட்பாடுகளும் இணைநிலைகளாக இருப்பதை சுட்டிக்காட்டி உள்ளேன். இதன் வளர்ச்சி அழகியல் கோட்பாட்டையும் ஏற்க வைத்தது. கடந்த 2011 இல் தொல்காப்பியமும் ஃப்ராய்டியமும் : அழகியல் இணைநிலைகள்
No comments:
Post a Comment