Tuesday, 26 June 2012

வள்ளலாரில் இடப்பெயர்வு

இடப்பெயர்வு (displacement ) என்பது ஃப்ராய்டிய  இயங்கியலில் குறிப்பிடத்தக்க உளச் செயற்பாடு ஆகும். நெருக்கடி நிலையில் சில உளச் செயற்பாடுகள் அவற்றின் இயல்பில் வெளிவர தடை (resistance) ஏற்படும். உள்ளேயே இருந்தால் உளக்கேடு. எனவே அவை தமது இயல்பு மாறா வண்ணம் மாற்று வழிகளில் வெளிப்பட வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்ளும். ஃப்ராய்ட்  கூற்றுப் படி, பாலுணர்வும் மூர்க்கமும் சமூகத்  தடைக்கு உள்ளாகுபவை. மேல் அதிகாரி மீதான கோபம் அதன் இயல்பில் வெளிப்பட வாய்ப்பு இல்லை. தடை காரணமாக மனைவி மீது பாயும். கணவன் மீதான கோபம் பிள்ளை மீது பாயும். கடைசியில் பொம்மை மீது குழந்தை தமது கோபத்தைக் காட்டும். சில உணர்வுகள் மாற்றுப்  புறநிலையில்   உணர்வை வெளிப்படுத்தினாலும் மன நிறைவு கொள்ளாது. அவ்வமயம் வேறு புறநிலைகளை மாற்றிக் கொள்ளும் போக்கு உள்ளத்திற்கு உண்டு. மறுமணங்கள் சான்று..

சிலரிடம் கடவுள் கூட மாற்றத்திற்கு உட்படுகிறது. ஏதோ நிறைவைத் தேடிச் செல்லும் மனத்தின் பயணம் இது. நிறைவு கண்டுவிட்டால் மாற்றம் நின்று விடும். எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்தாலும் பக்தி மாறாது. இது தான் உள மெய்ம்மை. ஃப்ராய்ட்  கூறும் இடப்பெயர்வு  இவ்வாறாக நிகழ்கின்றது. வள்ளலாரின் கடவுள் கொள்கை பல மாற்றங்களைக் கொண்டது. முருகன், சிவன், நடராஜன், கடைசியில் ஜோதி.. மாற்றத்துக்குக் காரணம் என்ன.. விவரிக்கிறது இந்த ஆய்வு..

No comments:

Post a Comment