Monday, 18 June 2012

பலிச்சடங்கு : ஃப்ராயடியப் பகுப்பாய்வு

கடவுள் கருத்தில் இருந்து படிமலர்ந்த நிறுவனம் சமயமாகும்.. மனித பகுத்தறிவு வளர்ச்சிக்கு ஏற்ப கற்காலக் கடவுள் பரிணமித்தது.. அன்றுபோல் இன்று மனிதனும் இல்லை கடவுளும் இல்லை.. நிறுவனமயமாக்கப்பட்ட சமயம் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவானது.. அதற்கு முன் தொன்ம சமயம்,, நாட்டுப்புறச் சமயம் நிலவி வந்தன. காலத்துக்கு ஏற்றபடி சமய நடவடிக்கைகள் இருந்தன. கற்காலத்தில் காட்டுமிராண்டி பாவத்தோடு சமயம் இருந்தது.. மனித பலிகள் கொடுத்ததும் உண்டு.. அடுத்த நாட்டுப்புறச் சமயத்தில் வரையறைகள் வகுக்கப்பட்டன. பின்வந்த செவ்வியல் சமயத்தில் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டன. இந்த விதிமுறைகளே நிறுவனமயமாக்கலின் சாட்சியங்கள் ஆகும்..

நாட்டுப்புறச் சமயம் என்பது நாட்டுப்புறத் தெய்வத்தை மையமாகக் கொண்ட அமைப்பு.. ஒவ்வொரு தெய்வத்துக்கு ஏற்ப அமைப்பு மாறுபடும்..அந்த அமைப்பில் நாட்டுப்புற மக்கள் தீவிரமாக இருப்பர். பழக்க வழக்கங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இது ஃப்ராய்ட் சொல்லும் பீடிப்பு நோய்க் குறியைக் குறிக்கும்.. நாட்டுப்புறச் சமயக் கருத்தியல்களில்  பலிச்சடங்கு சிறப்பு அடையாளம் ஆகும். இதை நாட்டுப்புற மக்கள் விட்டுக்கொடுக்க மாட்டர். சமண சாமியான ஐயனார் கோயிலில் கூட உயிர்ப் பலிச் சடங்கு நடத்துவர். இதற்குப் பின்னணி என்ன?
சமூகப் பின்னணிபடி இதில் கூட்டுணர்வு இருக்கிறது.  உளப்பின்னணி படி என்ன உள்ளது என்பதை உளவியலில் நூறாண்டுகளாக சிந்தித்து வருகின்றனர்.  இதைப் பற்றி உளப்பகுப்பாய்வு கூறும்போது நனவிலி காயடிப்புச் சிக்கலை (castration complex ) முன்வைக்கிறது.  ஃப்ராய்ட், ரைக் முதலியோர் இதையே முன்வைக்கின்றனர். எனக்கு இதில் முழு நிறைவு இல்லை. காரணம், பலிக் கொடுப்பது உணவுக்காக. கூட்டாக  உண்பதற்காக. எனவே இச்சடங்கில் காயடிப்புத் தாண்டி வாய் மோகம் (oral eroticism ) உள்ளது என்று நிரூபிக்கிறேன். காயடிப்புச் சிக்கல்லுக்கும் வைச் சிக்கலுக்கும் இடையே இயைபு இருப்பதை ஓரிடத்தில் ஃப்ராய்ட் கூறியதைக் கொண்டுதான் இதை நிறுவுகிறேன்.

இந்த ஆய்வு  ஒரு ஃப்ராயடியன் பார்வையில் தமிழ் நாட்டுப்புற வழக்காறுகள் எனும் நூலில் ஓர் இயலாக உள்ளது.

No comments:

Post a Comment